விசேட மின்சார வாகன இறக்குமதி ஆரம்பம்

வெளிநாடுகளில் பணியாற்றுகின்ற இலங்கையர்கள் வங்கிக் கட்டமைப்பின் ஊடாக பணத்தை நாட்டுக்கு அனுப்புவதை ஊக்குவிப்பதற்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் அமுலாக்கப்பட்டுள்ளன.

அவற்றில் அதிகப்படியான வெளிநாட்டு நாணயங்களை அனுப்புகின்றவர்கள் மின்சார வாகனம் ஒன்றை இறக்குமதி செய்து கொள்ளவும் அதற்கு வரி சலுகையை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்த வேலைத்திட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டதாகவும், இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விடுவிக்கும் நடவடிக்கைகளைச் சுங்கத் திணைக்களம் ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாடுகளில் பணியாற்றுகின்ற இலங்கையர்கள் தங்களது பணத்தை சட்டரீதியாக இலங்கைக்கு அனுப்புவதை ஊக்குவிக்கும் வகையில் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் அமைச்சர் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார்.

Please follow and like us: