பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றி வருகிறார்.

அவரது உரையின் முக்கியமான சில விடயங்கள் அய்வரி வாசகர்களுக்காக சுருக்கமாக…

பொருளாதார பிரச்சினை பெரும்பாலும் தீர்க்கப்பட்டுள்ளது.

  • உரங்களை வழங்குவதன் மூலம் யால மற்றும் மஹா பருவங்களில் வெற்றிகரமான அறுவடையை நாடு பெற்றுள்ளது.
  • 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் விவசாய உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி நியாயமான அளவு இயல்பு நிலைக்கு வந்துள்ளது.
  • பொருளாதார பிரச்சினைகள் பெரும்பாலும் தீர்க்கப்பட்டுள்ளது.
  • 2019இன் வருக்கொள்கை மீள ஆரம்பம்
  • 2019 இல் நடைமுறைப்படுத்தப்பட்ட வரிக் கொள்கைகளை மீள வழங்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் அமுல்படுத்தியது.

அத்தியாவசியப் பொருட்கள்,

  • தடையில்லா மின்சாரம், விவசாயிகளுக்கு உரம், சமுர்த்தி பயனாளிகளுக்கு மேலதிக நிதி வழங்குதல் மற்றும் வருமானத்தை மேம்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நிலைமை சீரடைகிறது

  • 2022ஆம் ஆண்டில், நாட்டில் ஏற்பட்ட சாதகமற்ற சூழ்நிலைகள் சுற்றுலாதுறையை பாதித்தன.
  • எவ்வாறாயினும், இந்த ஆண்டு நிலைமை சீரடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
  • அரசாங்கம் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு மிகவும் கடினமான பல பொருளாதார நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
  • பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  • இதனால் ஏற்படும் துன்பம் சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் தொடர்கிறது.

சீனா உத்தரவாதம்

  • நேற்றிரவு சீன எக்சிம் வங்கியிடமிருந்து அரசாங்கத்திற்கு உத்தரவாதக் கடிதம் கிடைத்தது.
  • மத்திய வங்கி ஆளுநர் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கையொப்பமிடப்பட்ட கடிதம் அன்றிரவே சர்வதேச நாணய நிதியத்திற்கு அனுப்பப்பட்டது.

போராட்டக்காரர்களுக்கான அறிவித்தல்

  • மக்களின் கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமையை ஏற்றுக்கொள்கிறேன்.
  • ஆனால் எந்தவொரு நாசவேலைகளுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
  • நாட்டில் ஜூலை 09 ஆம் திகதி ஏற்படதைப் போன்றும் மீண்டும் இடம்பெற அனுமதிக்க வேண்டாம்.
  • நாட்டில் அராஜகம் ஏற்படுவதைத் தடுக்கும் அர்ப்பணிப்புக்காக முப்படை மற்றும் காவல்துறையினருக்கு அவர் நன்றி.

எப்போது தேர்தல்?

  • நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளில் இணைந்து கொள்ளுமாறு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கிறேன்.
  • நாட்டை ஸ்திரப்படுத்தியவுடன் தேர்தல் நடத்தப்படும் என உறுதியளிக்கிறேன்.

IMF உடன்படிக்கை பாராளுமன்றில்

  • சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை விரைவில் எட்டப்படும்.
  • அதன் பின்னர் அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்கள் மற்றும் பொருளாதார பாதை வரைபடத்தின் வரைவோடு உடன்படிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
Please follow and like us: