பொலிஸாரால் வழங்கப்பட்ட சிங்கள மொழிமூல ஆவணத்தை ஏற்க மறுத்த சிறிதரன்

யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஆஜராகுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரனுக்கு  வழங்கப்பட்ட ஆவணம் சிங்கள மொழியில் உள்ளதால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் பொலிஸாரிடம்  தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 20ஆம் திகதி யாழ்.நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு தெரிவிக்கும் ஆவணத்தை கையளிப்பதற்காக பொலிஸ் உத்தியோகத்தர்களை சிறிதரன் சந்தித்தபோது, அந்த ஆவணம் சிங்களத்தில் இருப்பதால் தனக்கு சிங்களம் வாசிக்க முடியாது என பொலிஸாரிடம் தெரிவித்தார்.

பின்னர் அதனை மொழிபெயர்த்து எம்பியிடம் பொலிஸார்  கொடுத்தபோது, குறித்த ஆவணத்தை   தமிழில் பதிவுத் தபாலில்   அனுப்பினால் மட்டுமே ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Please follow and like us: