ஜேர்மனியில் கிறிஸ்தவ சபைக்குள் துப்பாக்கிச் சூடு – பலர் பலி

வடக்கு ஜேர்மனியின் ஹம்பர்க் நகரில் உள்ள யெகோவாவின் சாட்சிகளின் கூட்ட அரங்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டனர்.

துப்பாக்கிதாரி தனியாக செயல்பட்டதாகவும், இறந்துவிட்டதாக கருதப்படுவதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.

இதுவரை, “இதன் நோக்கம் குறித்து நம்பகமான தகவல்கள் எதுவும் இல்லை” என்று போலீசார் கூறுகின்றனர்.

நகரின் Gross Borstel மாவட்டத்தில் உள்ள Deelböge தெருவில் நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் ஏராளமானோர் காயமடைந்தனர்.

சம்பவ இடத்தில் இறந்த நபர் ஒருவரைக் கண்டுபிடித்ததாகவும், அவர் தாக்குதல்தாரியாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும், விசாரணைகள் தொடர்வதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Please follow and like us: