நிதியமைச்சின் செயலாளருக்கு ஐ.ம.ச. எச்சரிக்கை  

உயர் நீதிமன்ற உத்தரவின்படி தேர்தலை நடத்துவதற்கான தேவையான பணத்தை வழங்காவிட்டால், நிதியமைச்சின் செயலாளருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் அக் கட்சியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.

Please follow and like us: