விஞ்ஞானியின் மரணத்துக்கான காரணம் வெளியானது!

கொணபல கும்புக பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த தொழில்நுட்ப நிறுவகம் ஒன்றைச் சேர்ந்த விஞ்ஞானி விமுக்தி பிரசாத் ஜயவீரவின் மரணம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் அவரது மரணத்துக்கான காரணம் வெளியாகியுள்ளது.
விபத்துக்குள்ளான காரின் ஓட்டுனர் இருக்கை பகுதியில் காணப்படும் காற்றுப் பையில் இருந்த இரும்புத் துண்டு அவரது தொண்டையில் குத்தி சிக்கியதால் மரணம் நிகழ்ந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
ஹொரணை வைத்தியசாலையின் சட்ட வைத்தியர் பிரனீத் விஜேசுந்தர இந்த பிரேத பரிசோதனையை மேற்கொண்டிருந்தார்.
Please follow and like us: