மாசி 5, 2023

சானியா மிர்ஸா ஓய்வு பெறுகிறார்

அடுத்த மாதம் துபாயில் நடைபெறவுள்ள போட்டிகளுடன் தொழிற்சார் டென்னிஸ் போட்டிகளிலிருந்து தான் ஓய்வு பெறவுள்ளதாக இந்திய வீரர் சானியா மிர்ஸா அறிவித்துள்ளார்.

36 வயதான சானியா மிர்ஸா, எதிர்ரும் 16ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டிகளின் மகளிர் இரட்டையர் பிரிவில் கஸக்ஸ்தானின் அனா டேனிலினாவுடன் இணைந்து விளையாடவுள்ளார்.

அது சானியாவின் இறுதி கிராண்ட்ஸ்லாம் போட்டியாக இருக்கும்.
அதன்பின் பெப்ரவரி 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள துபாய் டியூட்டி ப்றீ சம்பியன்ஷிப் போட்டிகளிலும் சானியா பங்குபற்றவுள்ளார்.

அப்போட்டியுடன் தான் ஓய்வு பெறவுள்ளதாக மகளிர் டென்னிஸ் சங்கத்தின் இணையத்தளத்துக்கு அளித்த செவ்வியில் சானியா தெரிவித்துள்ளார்.

2003 ஆம் ஆண்டிலிருந்து தொழிற்சார் போட்டிகளில் பங்குபற்றும் சானியா மிர்ஸா, மகளிர் இரட்டையரில் உலகின் ] முன்னாள் முதல் நிலை வீராங்கனையாவார். மகளிர் இரட்டையர் போட்டிகளிலும், கலப்பு இரட்டையர் போட்டிகளிலும் தலா3 கிராண்ட்ஸ்லாம் சம்பியன் பட்டங்களையும் அவர் வென்றுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சொய்ப் மாலிக்கை திருமணம் செய்த சானியா, 10 வருடங்களாக துபாயில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Please follow and like us: