ஜனாதிபதியை விவாதத்துக்கு அழைக்கும் சஜித்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று பாராளுமன்றில் விசேட உரையை ஆற்றி இருந்தார்.

இதுதொடர்பாக இரண்டு நாட்கள் விவாதத்தை நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

அடுத்த பாராளுமன்ற அமர்வில் இந்த விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று அவர் கோரினார்.

இதுகுறித்து ஆராய்வதாக சபாநாயகர் தெரிவித்தார்.

Please follow and like us: