ஆளில்லா அமெரிக்க விமானத்துடன் ரஷ்ய ஜெட் மோதல்

கருங்கடல் பரப்பில் அமெரிக்க ஆளில்லா விமானம் மீது ரஷ்ய இராணுவ ஜெட் விமானம் செவ்வாயன்று மோதும் காணொளியினை பென்டகன் வெளியிட்டுள்ளது.

காணொளியில் ரஷ்யாவின் Su-27 போர் விமானம் அமெரிக்காவின் MQ-9 ஆளில்லா உளவு விமானத்திற்கு மிக அருகில் வருவதும், அதன் அருகே எரிபொருளைக் கொட்டுவதும், இடைமறித்து மோதுவதும் வெளிப்படுகின்றது.

எவ்வாறெனினும் இந்த சம்பவத்தில் தனது ஜெட் விமானங்கள் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டதாக அமெரிக்கா முன்வைத்த குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது.

Please follow and like us: