பணச்சலவைக்கு எதிரான அமைப்பிலிருந்து ரஷ்யா இடைநிறுத்தம்  

உலக நிதிக் குற்றவியல் கண்காணிப்பு அமைப்பான, நிதியில் நடவடிக்கை துரிதச் செயலணி (FATF) தனது அங்கத்துவத்திலிருந்து ரஷ்யாவை இடைநிறுத்தியுள்ளது.

தனது கொள்கைகளை உக்ரைன் மீதான ரஷ்யாவின் யுத்தம் மீறியுள்ளது என இவ்வமைப்பு கூறியுள்ளது.

பாரிஸ் நகரைத் தளமாகக் கொண்ட FATF அமைப்பு, பணச்சலவை, பயங்கரவாதத்துக்கு நிதியளித்தலை தடுத்தல்  முதலான விடயங்களை கண்காணிக்கிறது.

இவ்வமைப்பிலிருந்து ரஷ்யாவை வெளியேற்ற வேண்டும் என கடந்த வருடம் உக்ரேன் பல தடவை வலியுறுத்தியிருந்தது. இந்நிலையில், ரஷ்யாவை அங்கத்துவத்திலிருந்து FATF  இடைநிறுத்தியுள்ளது.

பூகோள நிதியில் முறைமையின் பாதுகாப்பு மற்றும் நேர்மையை ஊக்குவிக்கும் நோக்குடனான, குயுவுகு அமைப்பின் கொள்கைகளை ரஷ்யாவின் நடவடிக்கைகள் மீறுகின்றன என அவ்வமைப்பு கூறியுள்ளது.

அங்கத்துவத்திலிருந்து இடைநிறுத்தப்பட்டபோதிலும் தனது நிதியியில் கடப்பாடுகளை ரஷ்யா தொடர்ந்து பின்பற்ற வேண்டும் எனவும்,இந்நிலைமை குறித்து தனது சந்திப்புகளின்போது ஆராயப்படும் எனவும் FATF தெரிவித்துள்ளது.

Please follow and like us: