ரூ. 2 இட்சமாக வரி வரம்பை அதிகரிக்க வேண்டும்

அரசாங்கம் தற்போதுள்ள 1 இலட்சம் ரூபாய் வரி வரம்பை உடனடியாக குறைந்தது 2 இலட்சமாக அதிகரிப்பதன் மூலம் நடுத்தர வர்க்கத்தை பாதுகாக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன வலியுறுத்தினார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் புதன்கிழமை (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் குறிப்பிட்டார்.

அதிக வருமானம் ஈட்டுபவர்களின் வரி சதவீதத்தை அதிகரிப்பதன் மூலம்  முன்மொழியப்பட்ட வருவாய் இழப்பை ஈடுசெய்ய முடியும் என்று அவர் பரிந்துரைத்தார்.

எனவே, 1 இலட்சம் ரூபாய் வரி வரம்பை உடனடியாக குறைந்தது 2 இலட்சமாக உயர்த்தி நடுத்தர வர்க்க ஊழியர்களைப் பாதுகாக்குமாறு ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

உழைக்கும் மக்கள் வருமானத்தை இழந்து பெரும் வரிச்சுமையால் மக்கள் வீதிக்கு வரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் இதனால் உணவுப் பாதுகாப்பின்மை, அதிகரித்த போஷாக்குக் குறைபாடு, நோய்களைத் தடுப்பது என்பன மக்களுக்குப் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

Please follow and like us: