ரூ. 50 இலட்சம் மதிப்புள்ள தங்கச்சங்கிலி கொள்ளை  

கந்தானை பிரதேசத்தை சேர்ந்த தொழிலதிபரின் ரூபாய் 50 இலட்சம் பெறுமதிமிக்க தங்கச்சங்கிலியை நேற்று  முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் இருவர் கொள்ளையடித்து தப்பிச் சென்றதாக கந்தானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹோட்டல் உரிமையாளரான குறித்த தொழிலதிபர் வீட்டின் முன் உள்ள வாய்க்காலை சுத்தம் செய்து கொண்டிருந்த பொழுது குறித்த பகுதிக்கு மோட்டார்  சைக்கிளில் வந்த இருவர் தொழிலதிபரின் கழுத்திலிருந்த தங்கச்சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பியோடியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நடந்த சம்பவம் தொடர்பில் குறித்த தொழிலதிபர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் தாம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நகையைக் கொள்ளையடித்தவர்கள் தொடர்பில் இதுவரையில் எந்த தகவலும் கிடைக்கவில்லை. கந்தானை  பொலிஸ் நிலைய பிரதான பொறுப்பதிகாரி காமினி ஹேவா விதாரணவின் வழிகாட்டுதலின் கீழ் விசாரணைகள் நடைபெறுகின்றன.

Please follow and like us: