2000 ரூபாவிற்கு தடை விதிக்கும் அபாயம்!  

2000 ரூபா நாணயதாளை நிதி அமைப்பில் இருந்து திரும்பப் பெறுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“பல்வேறு வரிகள் அதிகரிக்கப்பட்ட போதிலும் நாட்டில் கறுப்பு பண சந்தை செழித்து வருகின்றது.

2,000 ரூபா நாணயதாள்களை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவது குறித்த அறிவிப்பு வெளியானால், கறுப்புப் பணம் முழுவதும் அம்பலமாகும்.

ஊழலை ஒழிப்பதற்கு இந்த நடவடிக்கை அவசியமானது என்பதுடன் இது தொழிலாளர் வர்க்கத்தின் சுமையையும் குறைக்கும்.”என வலியுறுத்தியுள்ளார்.

Please follow and like us: