நீதிபதிகள் மீதான வரி குறித்த தீர்மானம்

நீதிபதிகளின் சம்பளத்துக்கு வரி விதிக்கும் முடிவை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டு இரண்டு ரிட் மனுக்களை ஐந்து நீதிபதிகள் கொண்ட குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ.மரிக்கார் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
குறித்த மனுவை வரும் 22ம் திகதி விசாரணைக்கு எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
அன்றைய தினம் வரை நீதிபதிகளின் சம்பளத்தில் இருந்து உரிய வரியை வசூலிப்பதைத் தடுக்க விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீடித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இலங்கை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சங்கம் மற்றும் இலங்கை நீதித்துறை அதிகாரிகள் சங்கம் ஆகியவை உரிய மனுக்களை சமர்ப்பித்திருந்தன.