பண்ணை கடலில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு

யாழ்.பண்ணை கடலில் பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் கரை ஒதுங்கிய நிலையில் பொதுமக்களால் கண்டுபிடிக்கப்பட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் சடலத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என கூறியுள்ள யாழ்ப்பாணம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

Please follow and like us: