அதிக வட்டிக்கு வங்கிக்கடன் பெற்றோருக்கு நிவாரணம்

அதிக வட்டி விகிதங்கள் மற்றும் வரிகள் காரணமாக கடன் பெற்று தவிக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 2 சுற்றுநிருபங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்து சில விடயங்கள் –
கடனை மறுசீரமைத்து கடனை செலுத்தக்கூடியவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
அதிக வட்டி மற்றும் வரி விதிப்பால் கடன் வாங்கியவர்கள் கடனை செலுத்த முடியாமல் சிரமப்படுவதாக முறைப்பாடுகள் வருகின்றன
அவர்களுக்காக ஏற்கனவே இரண்டு புதிய சுற்றறிக்கை வழங்கியுள்ளோம்.
அவற்றைக் கருத்தில் கொண்டு கடன் உள்ளவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் நிவாரணம் வழங்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.