6 வருடங்களாக போராடும் உறவினர்கள்  

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கிளிநொச்சியில் முன்னெடுக்கும் போராட்டம் ஆறாவது ஆண்டை நிறைவு செய்தது.

இதனை முன்னிட்டு 2190ஆவது நாளான நேற்று (20) கிளிநொச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட உறவினர்களை உள்ளடக்கிய மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

அவர்களின் அன்புக்குரியவர்கள் காணாமல் போனதற்கு காரணமானவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) ஆஜர்படுத்துவதன் மூலம் சர்வதேச சமூகம் அடையாளம் காண வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினார்கள்.

உண்மை மற்றும் நீதிக்கான இந்த போராட்டம், 2017 பெப்ரவரி 20ஆம் திகதி கிளிநொச்சி கந்தசாமி கோவில் வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

இதில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை இணைத்துள்ளனர்.

Please follow and like us: