அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் குறைப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்ததன் காரணமாகப் பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
செரண்டிப் மற்றும் பிரீமா நிறுவனங்கள் நேற்று முதல் கோதுமை மா ஒரு கிலோவின் விலையை 15 ரூபாவக குறைத்துள்ளன.
இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களின் மொத்த விலையில் சுமார் 10 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் இறக்குமதி செய்யப்படும் சீனி, பருப்பு மற்றும் வெங்காயத்தின் மொத்த விலைகள் ஒரு கிலோ கிராமுக்கு 30 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாகச் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
450 கிராம் பாண் ஒன்றின் விலையும் நேற்று நள்ளிரவு முதல் 10 ரூபாவினால் குறைக்கப்படுவதாக அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கத்தினரால் அறிவிக்கப்பட்டிருந்தது.