மாதகலில் 126 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்பு!  

யாழ்ப்பாணம், மாதகல் கடற்பகுதியில் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கையின்போது 126 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் நேற்றைய தினம் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கையின்போதே நான்கு பைகளிலிருந்து 55 கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

இவற்றின் பெறுமதி 41 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் கடற்படையின் தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகள் காரணமாக, கடத்தல்காரர்கள் கஞ்சா தொகையினை விட்டுச் சென்றிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

எவ்வாறெனினும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கடற்படையினர் முன்னெடுத்துள்ளனர்.

Please follow and like us: