அலுவலகத்துக்குச் சென்ற பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜானக ரத்நாயக்க ஏமாற்றமடைந்தார்!

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க நேற்று (28) கொள்ளுப்பிட்டியில் உள்ள சீ ல் வைக்கப்பட்ட அவரது அலுவலகத்துக்குச் சென்ற போதிலும், அலுவலகத்தை திறக்க பொலிஸார் வராததால் அவர் ஏமாற்றமடை ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் வெளி நா ட்டில் இருந்தபோது நீதிமன்ற உத்தரவின் பேரில் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் அவரது அலுவலகம் கடந்த மாதம் 16 ஆம் திகதி சீல் வைக்கப்பட்டதுடன் அவர் நாடு திரும்பிய பின்னர் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், அலுவலகத்தை திறக்குமாறு கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தபோதும் பொலி ஸார் எவரும் வராத காரணத்தினால் அதனை திறக்கவில்லை என ரத்நாயக்க தெரிவித்தார்.

Please follow and like us: