பொருளாதார மீட்சிக்கு முன்னுரிமை அளிப்பேன் சட்ட ஒழுங்கை பேணுவேன்!

நாட்டில் குழப்பநிலை நிலவுவதை தடுப்பதற்காக சட்ட ஒழுங்கை பேணும் அதேவேளை பொருளாதார மீட்சிக்கு முன்னுரிமை வழங்கப்போவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த வருட இறுதிக்குள் நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் முன்னைய நிலைக்கு கொண்டுவரப்போவதாக உறுதியளித்துள்ள ஜனாதிபதி  செயற்துடிப்புள்ள ஜனநாயகத்தை உருவாக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (18) இடம்பெற்ற ரோட்டரி கழக மாநாட்டில் உரையாற்றுகையில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

Please follow and like us: