அரச பாடசாலைகள் மூடப்படும் நேரம் குறித்து பிரதமர் அதிருப்தி  

நாட்டிலுள்ள அரச பாடசாலைகளின் வளங்கள் சரியாக பயன்படுத்தப்படுவதில்லை என பிரதமர் தினேஸ்குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க பாடசாலைகள் 2 மணியுடன் மூடப்பட்டதன் பின்னர், மறுநாள் காலை 8 மணி வரையில் அவற்றின் வளங்கள் பயன்படுத்தப்படுவதில்லை.

ஆனால் தனியார் பாடசாலைகள் காலை முதல் மாலை வரையில் மாணவர்களுக்கு வெவ்வேறு வேலைத்திட்டங்கள் வழங்குவதற்காக அதன் வளங்கள் பயனுக்குள்ளாகின்றன.

இந்த நடைமுறை அரச பாடசாலைகளிலும் பின்பற்றப்பட வேண்டும்.

முக்கியமாக தற்போதைய டிஜிட்டல் உலகில் மாணவர்கள் சரியாக வளங்களைப் பயன்படுத்திக் கொள்வது அவசியமாகும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Please follow and like us: