காலாவதியான கண்ணீர்ப்புகைக் குண்டுகளை பயன்படுத்தும் பொலிசார்  

இலங்கையில் கண்ணீர்ப்புகைப் பாவனை தொடர்பில், பொலிஸார் எந்தவொரு ஆய்வுக்கூட பரிசோதனையையும் மேற்கொள்ளவில்லை என சமூகம் மற்றும் சமய நிலையத்தின் அறிக்கையில் தெரியவந்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், 2022 ஆம் ஆண்டு ஆர்ப்பாட்டங்களை கலைக்க இலங்கை பொலிசார் காலாவதியான கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அவற்றில் சில வெடிமருந்துகள் 2000 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டவை.

2022 மார்ச் முதல் ஜூலை வரை, நாட்டில் மிக மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காலத்தில், இலங்கை பொலிசார் 6,722 கண்ணீர் புகை குண்டுகளை 84 தனித்தனி சந்தர்ப்பங்களில் பயன்படுத்தியுள்ளனர்.

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டங்களின் போது இலங்கை பொலிஸாரால் ஒரே நாளில் ஏவப்பட்ட அதிகளவான கண்ணீர் புகை குண்டுகள் பதிவாகியுள்ளதாகவும், தினமும் சுமார் 100 கண்ணீர்ப்புகைக் குண்டுகள் ஆர்ப்பாட்டங்கள் மீது வீசப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Please follow and like us: