பொலிசார் பொதுமக்கள் மோதல் – 10 பேர் காயம்  

வீரக்கெட்டிய – அத்தனயல பகுதியில் பொலிசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலொன்றில் 2 பொலிஸார் உட்பட 4 பேர் காயமடைந்தனர்.

அந்தப்பகுதியில் சுற்றிவளைப்பினை மேற்கொள்ள பொலிசார் முயன்றபோது பிரதேச மக்கள் தடுத்துள்ளனர்.

இதன்போது இரண்டு தரப்புகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிந்திக்கிடைத்த தகவலின் படி, பொலிசார் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் 6 பொலிசாரும் 2 சிவில் பாதுகாப்பு அதிகாரிகளும் காயமடைந்துள்ளனர்.

2 பொதுமக்களும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Please follow and like us: