மஸ்கெலியாவில் வன பகுதியில் விஷமிகள் தீ வைப்பு

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்சீக் தோட்ட சின்ன நடு தோட்ட பிரிவில் தொலை தொடர்பு கோபுரம் அமைந்துள்ள பகுதியில் வன பகுதியில் நேற்று (15)  விஷமிகளால் தீ வைக்கப்பட்டமையால் முழுமையாக எரிந்து அழிந்துள்ளது.

இதனால் அப்பகுதியில் வாழ்ந்த வன ஜுவராசிகள் அழிந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. விஷமிகள் தீ வைப்பு மத்திய மலைநாட்டில் அதிகரித்து உள்ளதால் நீர் ஊற்று வற்றிபோகும் அபாயம் தோன்றியுள்ளது.

இதனை கட்டுபடுத்த மலையக பகுதிகளில் உள்ள அனைத்து மக்களும் முன் வரவேண்டும் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

Please follow and like us: