தேர்தலை இடைநிறுத்த கோரும் மனு மீண்டும் விசாரணைக்கு  

உள்ளுராட்சித் தேர்தலை இடநிறுத்தக் கோரி உச்ச நீதிமன்றில் இராணுவ முன்னாள் அதிகாரி ஒருவரால் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு 23ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் அறிவித்திருந்த நிலையில், அதனை விரைவுப்படுத்துமாறு மனுதாரரால் கோரப்பட்டிருந்தது.

இதன்படி இன்று குறித்த மனு விசாரணைக்கு வந்த போது, 22ம் திகதி நடைபெறவிருந்த அஞ்சல் வாக்களிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமக்கு உறுதியான தகவல் கிடைத்திருப்பதால், இந்த மனுவை இன்று அவசரமாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை என்று மனுதாரரின் சட்டத்தரணி ஊடக மன்றுக்கு அறிவிக்கப்பட்டது.

இதனைக் கருத்திற்கொண்டு இந்த மனுவை எதிர்வரும் 23ம் திகதியே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் தீர்மானித்தறிவித்தது.

Please follow and like us: