மின்கட்டண அதிகரிப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றில் மனு – சஜித் அறிவிப்பு  

இலங்கை மின்சார சபையினால் அண்மையில் அமுல்படுத்தப்பட்ட மின் கட்டணத் திருத்தத்தை மீளப்பெற கோரி ஐக்கிய மக்கள் சக்தி உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்யவுள்ளது.

மதத் தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தி (SJB) தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ள கருத்துகள் சில:-

மின் கட்டண உயர்வுக்கு எதிராக மற்ற அனைத்து சக்திகளுடனும் கூட்டுப் போராட்டத்தை நடத்த வேண்டும்.

அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ள தன்னிச்சையான மின் கட்டண உயர்வை தோற்கடிக்க மத தலைவர்கள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்களுடன் நாங்கள் விரிவான சந்திப்பை நடத்தியுள்ளோம்.

அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை தோற்கடிக்க அனைத்து அரசியல் கட்சிகளும் சிவில் சமூக அமைப்புகளும் ஒன்றிணைந்து செயற்படும் என நம்புகின்றோம்.

இதற்கு எதிராக நாங்கள் ஒரு அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்வோம்.

அதற்கு SJB முழுமையாக ஆதரவளிக்கும்.

அடுத்ததாக, இந்த விவகாரம் குறித்து பொதுமக்களிடமும், பாராளுமன்றிலும் விவாதிக்க உள்ளோம்.

அரசின் இந்த கொடூர செயலை முறியடிக்க நாங்கள் பாடுபட்டு வருகிறோம்.

Please follow and like us: