RRR படத்தின் “நாட்டு நாட்டு” பாடலுக்கு ஒஸ்கார் விருது

இந்திய இயக்குனர் ராஜ மௌலியின் RRR திரைப்படத்தில் இடம்பெற்ற “நாட்டு நாட்டு” பாடலுக்கு ஒஸ்கார் விருது கிடைத்துள்ளது.
மணி ஷர்மாவின் (கீரவாணி) இசையில் உருவான இப்பாடலுக்கு, சிறந்த பாடலுக்கான விருது கிடைத்துள்ளது.
இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோருக்கு ஒஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டன.
சிறந்த பாடலுக்கான ஒஸ்கார் விருது பெறும் இரண்டாவது இந்திய பாடல் இதுவாகும்.
இதற்கு முன்னர் ஏ. ஆர். ரஹ்மானின் “ஜெய் ஹோ” பாடலுக்கு ஒஸ்கார் விருது கிடைத்திருந்தது.
Please follow and like us: