கடலில் குளிக்கச்சென்று காணாமல்போன 3 மாணவர்களில் ஒருவர் சடலமாக மீட்பு

கடலில் குளிக்கச்சென்று காணாமல்போன 3 மாணவர்களில் ஒரு மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல்போன இரு மாணவர்களையும் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தறை வெல்லமடம பகுதியில் உள்ள கடலில் நேற்றையதினம் வெள்ளிக்கிழமை (17) குளிக்கச்சென்ற 3 மாணவர்கள் காணாமல் போயிருந்த நிலையில், 17 வயதுடைய மாணவனின் சடலம் மீட்கப்பட்டது.

இந்நிலையில் கடலில் காணாமல்போன ஏனைய 2 மாணவர்களையும் தேடும் பணிகள் இடம்பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Please follow and like us: