மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

இரத்தினபுரி தேல்வல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பேபோட்டுவ பிரதேசத்தில், மின்னல் தாக்கத்துக்கு உள்ளான நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பெண்ணொருவர் எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
42 வயது நபரே உயிரிழந்துள்ள நிலையில் 36 வயது பெண் தொடர்ந்தும் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.
Please follow and like us: