ரயிலுடன் மோதுண்டு ஒருவர் பலி  

கொழும்பு, கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் காலி நோக்கிப் நோக்கி பயணித்த ரயிலுடன் பதின்ம வயதுடைய நபரொருவர் மோதுண்டு உயிரிழந்தார்.

ரயிலில் மோதுண்ட நபர் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு, தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் அங்குச் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் 18 வயதுடைய கேகாலை, களுகல்ல பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பாட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Please follow and like us: