தேசிய மக்கள் சக்தி போராட்டத்தில் காயமடைந்த ஒருவர் மரணம்

கொழும்பில் தேசிய மக்கள் சக்தி நேற்று நடத்திய போராட்டத்தின் போது இடம்பெற்ற தாக்குதலில் 50க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.

அவ்வாறு காயமடைந்த நிவித்திகல பிரதேசசபையின் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் நிமல் அமரசிறி (61) வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்தார். அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Please follow and like us: