போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் ஒரு தொகை 5000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்படையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

இதன்போது போலி‍ நாணயத்தாள்களை அச்சிடப் பயன்படுத்தப்பட்ட இயந்திரம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதான சந்தேக நபர் திருகோணமலையைச் சேர்ந்த 40 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை இன்றைய தினம் முல்லைத்தீவு நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Please follow and like us: