வாள் வெட்டு சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது

யாழ். இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிப்புலம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டு சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கனடா நாட்டிலிருந்து ஒருவர் மூலமாக இரண்டு இலட்சம் ரூபா பணத்தினை பெற்றுக் கொண்டதன் பின்னர், இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

சந்தேக நபரிடமிருந்து வாள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த பெப்ரவரி 26 முன்னெடுக்கப்பட்ட இந்த வாள் வெட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Please follow and like us: