பிரபல போதைப்பொருள் வர்த்தகர் மடகஸ்காரில் கைது

இலங்கையில் மிகவும் தேடப்பட்டு வரும் நபரான ‘ஹரக் கட்டா’ என்பவர் மடகஸ்காரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்டர்போல் மற்றும் மடகஸ்கார் சட்ட அமுலாக்கப் பிரிவின் கூட்டு முயற்சியினால் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
IVATO சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பல்வேறு குற்றவியல் சம்பவங்களுடன் தொடர்புடைய ‘ஹரக் கட்டா’ என்ற விக்ரமரத்ன நாடுன் சிந்தக்கவும், அவரது சகாவான ‘குடு சலிந்து’ என அழைக்கப்படும் சலிந்து மல்ஷிகா என்பவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு வாகனங்கள், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 2.5 மில்லியன் ரூபா பெறுமதியான அந்நாட்டு பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
டுபாய், மலேசியா, சிங்கப்பூர், சீஷெல்ஸ், மாலைத்தீவு மற்றும் மடகாஸ்கர் உட்படப் பல நாடுகளில் ஹரக் கட்டா ஒரு பரந்த போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை வழிநடத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.