வாகன உதிரிப்பாகங்களின் விலைகள் தொடர்பான அறிவிப்பு  

இலங்கையில் டொலர் விலை குறைவடைந்து ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வருகிறது.

இதனால் பல்வேறு பொருட்களின் விலைகள் குறைவடையும் நிலை இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி வாகனங்களின் உதிரிப்பாகங்களது விலைகளும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக வாகன உதிரிப்பாகங்களின் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் துசித்த அல்விஸை அய்வரி செய்திகள் தொடர்பு கொண்டு கேட்டது.

இதற்கு பதில் வழங்கிய அவர், டொலர் விலை வீழ்ச்சிக்கு அமைய வாகன உதிரிப்பாகங்களின் விலைகள் குறைவடையும் என்றாலும், அதற்கு சில மாதங்களேனும் காலம் எடுக்கும் என்று பதிலளித்தார்.

Please follow and like us: