உயர்தர பரீட்சை பெறுபேறு வெளியாகும் நாள் பற்றிய அறிவிப்பு

கடந்த வாரம் நிறைவடைந்த கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஜூன் மாத இறுதியில் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

உயர்தர விடைத்தாள் திருத்தப் பணிகளுக்கு கணிசமான ஆசிரியர்கள் விண்ணப்பிக்காத காரணத்தினால் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் நாளாந்த கட்டணம் போதுமானதாக இல்லை என்பதே இதற்கான காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Please follow and like us: