ரயில் சாரதிகள் வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பு

நாளை (10) நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட ரயில் இயந்திர சாரதிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அதன் செயலர் ஏ. டி. ஜெயசிங்க ரயில்வே பொது முகாமையாளருக்கு இதுகுறித்த அறிவிப்பை வழங்கியுள்ளார்.

ரயில் சாரதிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த போராட்டம் இடம்பெறவுள்ளது.

Please follow and like us: