பண்டிகைக்கால செலவுகளுக்குப் பணமில்லை | மத்திய வங்கி எடுத்துள்ள அதிரடி முடிவு

புதிதாகப் பணத்தை அச்சிடுவதில்லை என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் பண்டிகைக்கால கொடுப்பனவுகளுக்கு அரசாங்கத்திடம் போதிய நிதியில்லை.

இதனால் இலங்கை மத்திய வங்கி இந்த வாரம் 300 பில்லியன் ரூபாவுக்கான திறைசேரி முறிகளை ஏலத்தில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாளை (13) நடைபெறும் முதலாவது ஏலத்தில் மொத்தமாக ரூ.180 பில்லியன் மதிப்புள்ள திறைசேரி முறிகளும், மார்ச் 15ஆம் திகதி 120 பில்லியன் திறைசேரி முறிகளும் விற்பனைக்கு விடப்படவுள்ளன.

ரூ.180 பில்லியன் திறைசேரி முறிகளில் 70 பில்லியன் ரூபா பத்திரங்கள் 22% வட்டியுடன் 2024 நவம்பர் 15இலும், 110 பில்லியன் ரூபா பத்திரங்கள் 18% வட்டியுடன் 2027 மே 01இலும் முதிர்ச்சியடையவுள்ளன.

வழமையாக மத்திய வங்கி புதிய திறைசேரி முறிகளை வெளியிட்டு, அதற்கு முந்திய முறிகளுக்குச் செலுத்த வேண்டிய கொடுப்பனவுகளைச் செலுத்தும் என்றாலும், இம்முறை மிகப்பெரியளவு திறைசேரி முறிகளை வெளியிடுகின்றமை பண்டிகைக்கால செலவினங்களைக் கருதிய தீர்மானம் என விடயம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

Please follow and like us: