மாசி 5, 2023

எண்ணூரில் புதிய பள்ளி கட்டிடம்

திருவொற்றியூர், அத்திவாக்கம் பஜார் தெருவில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு போதிய வகுப்பறை இல்லாமல் இருந்தது. இதையடுத்து திருவொற்றியூர் எம்.எல்.ஏ. கே.பி.சங்கர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.75 லட்சம் செலவில் கூடுதல் வகுப்பறைகள் மற்றும் கவுன்சிலர் கோமதி சந்தோசின், மேம்பாட்டு நிதி ரூ.6.50 லட்சம் செலவில் பழைய கட்டிடத்தை சீரமைக்க திட்டமிடப்பட்டது. இந்த கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

கவுன்சிலர் கோமதி சந்தோஷ் தலைமை தாங்கினார். கே.பி.சங்கர் எம்.எல்.ஏ. கட்டுமான பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இரண்டு மாடியில் 6 வகுப்பறைகள் மற்றும் நவீன கழிப்பறை வசதியுடன் கூடிய பணியை ஆறு மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் சொக்கலிங்கம், தமிழரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Please follow and like us: