விமான நிலையங்களில் தங்க ஆபரணங்களை அணிவதில் புதிய கட்டுப்பாடு வருகிறது  

இலங்கையின் விமான நிலையங்களில் பயணிகள் தங்க ஆபரணங்களை அணிந்துவரும் விடயத்தில் மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருகின்றவர்கள் கடத்தல் தங்கங்களை அதிகளவில் கொண்டுவரும் நிலை நிலவுகிறது.

ஒருவருக்கு அதிகபட்சம் கொண்டுவரக்கூடிய தங்கத்தின் அளவு மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பல்வேறு தரப்பினர் பகுதி பகுதியாக தங்கத்தை கொண்டுவருவதாக கூறப்படுகிறது.

இதனைக் கட்டுப்படுத்த புதிய விதிமுறைகள் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என சுங்கத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

Please follow and like us: