தேர்தல் உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு இவ்வாரம் புதிய உறுப்பினர்கள்

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான புதிய உறுப்பினர்களின் நியமனம் இந்த வாரம் இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான விண்ணப்பங்கள் கோரும் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாகவும், விண்ணப்பங்கள் மீதான பகுப்பாய்வு தற்போது நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, புதிய உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான ஆரம்ப கட்ட கலந்துரையாடல் இந்த வாரம் நடைபெறவுள்ளது.

இதுவரை கிடைத்துள்ள 1,600க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களின் முதற்கட்ட தகுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டதைத் தொடர்ந்து புதிய ஆணைக்குழு உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

எவ்வாறாயினும், அரசியலமைப்பு பேரவை கூட்டத்தின் பின்னரே இந்த விடயம் தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Please follow and like us: