புதிய தேர்தல்கள் ஆணைக்குழு வியாழக்கிழமை நியமிக்கப்படுகிறது?  

தேர்தல் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான தீர்மானங்களை எடுக்க அரசியலமைப்பு பேரவை இந்தமாதம் 9ஆம் திகதி வியாழக்கிழமை சந்திக்கும் என்று சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான சில முக்கியமான முடிவுகள் வியாழக்கிழமை கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளது என்று சபாநாயகர் கூறினார்.

நிதி ஆணைக்குழு, கொள்முதல் ஆணைக்குழு, கணக்காய்வு ஆணைக்குழு, லஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு, நீதித்துறை சேவை ஆணைக்குழு, பொது சேவை ஆணைக்குழு, மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு, ஆகியவை தொடர்பாகவும் தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன.

அந்த ஆணைக்குழு,  உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான பூர்வாங்க பணிகள் இந்த நாட்களில் இடம்பெற்றுவருவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Please follow and like us: