மாசி 5, 2023

நெதர்லாந்து தூதுவர் வடமராட்சி கிழக்கு பண்ணைக்கு விஜயம்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, ஆழியவலை உலந்தைக்காடு  SK விவசாயப்பண்ணைக்கு இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர்  Bonnie Horbech நேற்றைய தினம் திங்கட்கிழமை விஜயம் மேற்கொண்டார்.

குறித்த விஜயத்தின் போது நெதர்லாந்து தூதுவர் விவசாயப்பண்ணையினை நடாத்தும் பெண்மணியின், விவசாய ஈடுபாட்டிற்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு அவரது பண்ணையினை பார்வையிட்டு, கால்நடைவளர்ப்பு, தென்னை மற்றும் ஏனைய பயிர்செய்கை செயற்பாடுகள் குறித்தும் பாராட்டினார்.
மேலும் யுத்தத்தின் பின்னர் குறித்த பகுதியில் வாழும் மக்களுடைய இன்றைய நிலை குறித்து கேட்டறிந்து கொண்டதோடு, மக்களின் வாழ்வாதார நிலை குறித்தும் அறிந்துகொண்டார்.
 குறித்த விவசாயப்பண்ணையினால் பிரதேச மக்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுத்து அவர்களது வாழ்க்கைத்தரத்தினை உயர்த்தமுடியுமென்றும்  இதன்போது நம்பிக்கை தெரிவித்தார்.

 

Please follow and like us: