அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வி | அடுத்தவாரம் பாரிய போராட்டம்

அரசாங்கத்தின் புதிய வரித் திருத்தங்கள் தொடர்பில், நேற்று (10) நிதியமைச்சின் செயலாளர் மற்றும் ஏனைய அதிகாரிகளுடன் தொழிற்சங்கங்களின் ஒன்றியம் நடத்திய கலந்துரையாடல் இணக்கப்பாடு இன்றி நிறைவடைந்துள்ளது.
இதன் காரணமாக பல தொழில் சங்கங்கள் எதிர்வரும் வாரத்தில் இருந்து தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட முடிவு செய்துள்ளன.
புதிய வரி அறவிடல்களை மீளப்பெறுமாறு தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தைக் கோரி வருகின்ற போதும், அதனை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
எனவே அரசாங்கத்தின் இந்த கொள்கைக்கு எதிராக நாடுதழுவிய பாரிய போராட்டங்களை அடுத்தவாரம் முதல் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
Please follow and like us: