நல்லூர் ஆலய வளாகம் முஸ்லிம்களுக்கு சொந்தமானது அல்ல!

நல்லூர் கந்தசுவாமி ஆலயம் அமைந்துள்ள இடத்தில் சமாதி இருக்கின்றது எனவும் அதற்கு ஆலயத்திற்குள்ளேயே விளக்கு வைத்துக் கொண்டிருக்கின்றார்கள் எனவும் சிரேஷ்ட சட்டத்தரணி கேசவன் சயந்தன் கூறியவை உண்மைக்கு புறம்பானது மற்றும் தவறான கருத்து என வடமாகாண அவை தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

நல்லூர் கந்தசுவாமி ஆலயம் அமைந்துள்ள இடத்தில் ஒரு முஸ்லிம் பாபாவின் சமாதி இருக்கின்றது. இன்று வரை அந்த சமாதிக்கு குறித்த ஆலயத்திற்குள்ளேயே விளக்கு வைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என சிரேஷ்ட சட்டத்தரணி கேசவன் சயந்தன் வெளியிட்ட கருத்து தொடர்பில் கேள்வியெழுப்பிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாண முஸ்லிம்கள் சிலர் நல்லூரிலும் குடியிருந்ததுடன் ஆலயத்தின் மேற்கு எல்லைப்பகுதியில் சில முஸ்லிம்கள் விளக்கு ஏற்றி வழிபாட்டில் ஈடுபடும் நிலையொன்று இருந்தது என சுட்டிக்காட்டியுள்ளார்.

Please follow and like us: