2 பிள்ளைகள் மர்மமாக கொலை – தாய் தற்கொலை முயற்சி

இரத்தினபுரி கரபிஞ்சா வத்தை பகுதியில் (சென்ஜோகிம் தோட்டத்தில்) வசித்து வந்த ஒன்றரை வயது மற்றும் ஏழு வயதுடைய இரண்டு சிறுவர்கள் கொல்லப்பட்டு அவர்கள் வசித்த வீட்டிற்கு அருகிலுள்ள தேயிலைத் தோட்டத்தில் வீசப்பட்ட நிலையில் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

ஏழு வயதுடைய கஜேந்திரகுமார் சர்வநாத் மற்றும் ஒன்றரை வயதுடைய கஜேந்திரகுமார் நிஷாத் ஆகிய இரு சிறுவர்களே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர்.

குழந்தைகளின் தாயான 39 வயதுடைய பெண், கடந்த 19ஆம் திகதி அதிகாலை 3.30 மணியளவில் இரண்டு குழந்தைகளுடன் சென்றதாகவும், தாயே இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் என்ற பெரும் சந்தேகம் எழுந்துள்ளதாகவும் குழந்தைகளின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டதுடன், அவர் ஒரே நேரத்தில் பல வலி நிவாரணிகளை உட்கொண்டதால் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக அய்வரி செய்தி சேவை பொலிசாரை தொடர்பு கொண்டு கேட்ட போது, கொலை செய்தது தாய்தானா? என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும், விசேட குழு அமைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Please follow and like us: