சென்னையில் பரவும் மர்ம காய்ச்சல்

சென்னையில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொசு தொல்லையும் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவியுள்ளது.

இதுகுறித்து சென்னை ராஜீவ் காந்தி அரசுபொது மருத்துவமனை டீன் தேரணிராஜன் கூறியதாவது: ஒவ்வோர் ஆண்டும் ஏற்படும் தட்பவெப்ப நிலை மாற்றம் காரணமாக வைரஸ்கள் தங்களது நிலையை மாற்றிக்கொள்வதால்தான் இத்தகைய காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தினமும் 12 ஆயிரம் புறநோயாளிகள் வந்தாலும்கூட காய்ச்சல் பாதிப்புகளால் வருவோரின் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கிறது. இது சாதாரணமான ஃப்ளு காய்ச்சலுக்கான அறிகுறியாகதான் இருக்கிறது.

காய்ச்சல் பாதிப்பால் வருவோருக்கு கரோனாபரிசோதனை மேற்கொண்டாலும், தொற்று எதுவும் அவர்களுக்கு இல்லை.

உடல்நிலை சரியில்லாத குழந்தைகளை மருந்து, மாத்திரை கொடுத்து பள்ளிக்கு அனுப்பவேண்டாம். பொதுமக்கள் யாரும் இத்தகையகாய்ச்சல் பாதிப்பு குறித்து பயப்பட வேண்டாம்.மருத்துவரின் ஆலோசனை பேரில் மட்டுமே மருந்துகளை உட்கொள்ள வேண்டும். மூச்சுவிடும் எண்ணிக்கை அதிகமாலும், நினைவாற்றல் குறையும்போதும், இடைவிடாத காய்ச்சல் போன்ற நேரங்களில் மட்டும் அவசியம் மருத்துவரை அணுக வேண்டும் என்று அவர் கூறினார்.

Please follow and like us: