வாகன பதிவு விதிகளில் மாற்றம் செய்ய முஸ்தீபு

இலங்கையில் வாகனப் பதிவு விதிகளில் மாற்றங்களை ஏற்படுத்த போக்குவரத்து அமைச்சர் பந்துள குணவர்தன தீர்மானித்துள்ளார்.
450 சீசீ க்கும் அதிக இயந்திரவலு கொண்ட மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வதில் சிக்கல்கள் இருக்கின்றன.
இதுகுறித்து அவதானம் செலுத்துமாறும், குறித்த இயந்திரவலு கொண்ட மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்து சட்டரீதியாக பயன்படுத்த இடமளிக்குமாறும், இலங்கையின் ஃபாஸ்ட் ரைடர்ஸ் உள்ளிட்ட விளையாட்டுக் கழகங்கள் கோரிக்கை விடுத்திருந்தன.
இதன்படி இலங்கைக்கு உதிரிப்பாகங்களாக கொண்டுவரப்பட்டு பொருத்தப்படுகின்ற 450சீசீ க்கும் அதிக வலுகொண்ட மோட்டார் சைக்கிள்களை சட்டரீதியாக பதிவு செய்யும் வகையில், வாகன பதிவு விதிகளில் திருத்தம் செய்யுமாறு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.