மொட்டு கட்சியின் திடீர் முக்கிய கூட்டம் நாளை

சிறிலங்கா பொதுஜனபெரமுனவின் முக்கிய கூட்டம் ஒன்று நாளை (21) கொழும்பில் நடைபெறவுள்ளது.
அதன் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்துக்கு, நாடெங்கிலும் உள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கட்டுப்பாட்டிலுள்ள உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தல் இப்போதைக்கு நடைபெறாது என்ற சூழ்நிலை உறுதியாகியுள்ள நிலையில், அடுத்தக் கட்ட அரசியல் முன்னெடுப்புகள் தொடர்பாக இதன்போது ஆராயப்படவுள்ளது.
Please follow and like us: